கிழிந்த பேன்ட் போட்டுகொண்டு... மெட்ரோ ரயிலில் செம்ம குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்!! வைரலாகும் வீடியோ!!

Published : Nov 07, 2021, 04:43 PM IST
கிழிந்த பேன்ட் போட்டுகொண்டு... மெட்ரோ ரயிலில் செம்ம குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்!! வைரலாகும் வீடியோ!!

சுருக்கம்

நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon), மெட்ரோ ரயிலில் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் கருப்பு நிற டீ - ஷர்ட் அணிந்தபடி... ஆங்கில பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

நடிகை லட்சுமி மேனன், மெட்ரோ ரயிலில் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் கருப்பு நிற டீ - ஷர்ட் அணிந்தபடி... ஆங்கில பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், தன்னுடைய 15 வயதிலேயே அறிமுகமாகி நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'சுந்தர பாண்டியன்' மற்றும் 'கும்கி' படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன்.  தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான, பிலிம் பேர் விருதையும், தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு, போன்றவை பெற்றார்.

ஒருபக்கம் படிப்பு, மற்றொரு பக்கம் நடிப்பு என இரண்டையும் கெட்டியாய் பிடித்து கொண்ட லட்சுமி மேனன்...  குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற தரமான படங்களை தேர்வு செய்து நடித்தார். அதே நேரம் இவருக்கு கிராமத்து வேடங்கள் மட்டுமே அதிகமாக கிடைத்தது. மாடர்ன் பெண்ணாக நடிக வேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்தாலும், அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது என்பது போல் இயக்குனர்களே இவரை மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை.

விஜய் சேதுபத்திக்கு ஜோடியாக இவர் நடித்த 'ரெக்க' பாத்திற்கு பின்னர் சுமார் 4 வாருங்கள் எந்த படவைப்பும் இல்லாமல் தவித்தார். அதே போல் இவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், எனவே லட்சுமி மேனன் நடிக்க வர வாய்ப்பில்லை என கூறப்பட்டது. ஆனால் திடீர் என, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தார். தற்போது இவர் கை வசம், 2 தமிழ் படம் மற்றும் ஒரு மலையாள படம் இருப்பதால், மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க  முயற்சி செய்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன்... அவ்வப்போது ஏதேனும் டான்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வங்கியில் தற்போது இவர் கொச்சி மெட்ரோ ரயிலில், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டி.ஷர்ட் போட்டபடி... ஆங்கில பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது கேரளாவில், வடகிழக்கு பருவமழை இடைவிடாது பெய்து வருவதால், மெட்ரோ ரயிலே பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதையும் லட்சுமி மேனன் தன்னுடைய வீடியோவில் காட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்