நம்பி ஒப்படைத்த கம்பெனியை நாசமாக்கி தன்னிடம் பணியாற்றிய கிரிக்கெட் கோச் ஒருவரும் தனது பணியாளர்களும் சேர்ந்து ரூபாய் 92 லட்சம் மோசடி செய்துள்ளாக பிரபல நடிகையும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
நம்பி ஒப்படைத்த கம்பெனியை நாசமாக்கி தன்னிடம் பணியாற்றிய கிரிக்கெட் கோச் ஒருவரும் தனது பணியாளர்களும் சேர்ந்து ரூபாய் 92 லட்சம் மோசடி செய்துள்ளாக பிரபல நடிகையும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் பல்வேறு டி.வி தொடர்களில் நடித்தவரும் தொடர் தயாரிப்பாளருமான குட்டிபத்மினி நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ’கிரிக்கெட்டில் உள்ள ஆர்வம் காரணமாக ‘கிரீடா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை கடந்த 2016ல் துவங்கினேன். இதில் மேலாண் இயக்குனராக இருக்கிறேன். இந்த ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷனில் சந்தோஷ் கோபி, சண்முகம் ஆகிய இருவரும் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். இதற்காக சந்தோஷ் கோபி அளித்த ஆலோசனை படி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தோம்.
மேலும் சந்தோஷ்கோபியின் அறிவுரைப்படி ரூபாய் 72 லட்சத்தை மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக வழங்கினேன். ஆனால் இதுவரை அந்த பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தினேன். அதன்பிறகு சந்தோஷ் கோபியிடம் பணத்தை கேட்ட போது 6 மாதத்தில் தருவதாக கூறினார். ஆனால் இதுவரை பணத்தை தரவில்லை. மேலும் அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்களான கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை அடித்து உடைத்தனர். அதில் எனது முதலீடு முக்கியமான ஆவணங்களை காணவில்லை.
எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் விவரங்களையும் சந்தோஷ்கோபி, எடுத்து சென்றுவிட்டார். அதன்மதிப்பு ₹ 20 லட்சம் ஆகும். எனவே என்னிடம் வாங்கிய ரூபாய் 72லட்சம் மற்றும் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூபாய்20லட்சம் ஆகியவற்றை பெற்றுத்தர வேண்டும். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போகிறேன் என்று சொன்னதற்காக எனக்கு மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்’ என்று அந்த மனுவில் குட்டி பத்மினி கூறியுள்ளார்.