
இதுவரை உள்ள பிராந்திய தேசிய, உலக ரெகார்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை புரிந்து வருகிறது நேற்று முன் தினம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தின் வசூல்.இப்படம் முதல் ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.
மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி உருவான படம் அவெஞ்சர்ஸ். தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உடன் முடிந்துள்ளது. மார்வல்ஸ் தி அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான், அவெஞ்சர்ஸ் இனிபினிட்டி வார் வரை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இப்படத்தைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற படம் உலகம் முழுவதும்24ம் தேதியும் இந்தியாவில் 26ம் தேதியும் ரிலீஸானது. தானோஸ் வில்லனுக்கும் சூப்பர் ஹீரோக்களான அவெஞ்சர்ஸ்க்கும் இடையில், நடக்கும் இறுதி யுத்தம் தான் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். ஹாலிவுட் படமான இப்படத்திற்கு விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் உட்பட பல நட்சத்திரங்கள் டப்பிங் பேசியிருந்தனர்.
என்னதான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியானாலும், படத்தின் வசூலுக்கு மட்டும் பஞ்சமில்லை. நேற்று உலகம் முழுவதும் ரூ.1403 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பிரபல ஆங்கில பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து வரும் வார இறுதிக்குள் 3 ஆயிரம் கோடி வரை வசூல் குவிக்கும் என்றும் மொத்தமாக, 7 ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த பிரமிப்பான வசூலால் அனைத்து மாநிலங்களிலும் வெளியான உள்ளூர்ப் படங்கள் மந்தமான வசூலைச் சந்தித்து கண்ணீர் சிந்தி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.