
நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில், அரசியல் கருத்து குறித்தும் சமூக பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய மனதில் பட்டதை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார். இதனால் அவ்வப்பொது அவருக்கு எதிரான விமர்சனங்களும் எழும்.
இப்படி ஆயிரம் கருதுக்கள் தனக்கு எதிராக தோன்றினாலும் அதற்கும் தனி ஆளாக நின்று பதிலடி கொடுத்து வருகிறார். ஆனால் சில நடிகைகள் சமூக வலைத்தளத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் சமூக வலைத்தளங்களை விட்டே விலகி விடுகின்றனர்.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் குஷ்புவை கூத்தாடி என்று குறிப்பிட்டு இவருடைய இயற்பெயரையும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் குஷ்பு சுந்தர் என்பதை பா .ஜனதாவுக்காக நக்கத் கான் என்று மாற்றி இருக்கிறார்.
இதுவரை குஷ்பு சுந்தர் என்றே தன்னுடைய பெயரை ட்விட்டரில் வைத்திருந்த இவர் தற்போது தன்னுடைய இயற்பெயரான நக்கத் கான் என்று குறிபிட்டுள்ளார்.
மேலும் 'என் பெயர் நக்கத் கான் என்பதை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா? என்று பதில் அளித்தார். என் பெயர் நக்கத் கான் என்பதை மறைக்க வில்லை என்றும் கூறி இருக்கிறார்.
இதனால் தற்போது 'குஷ்பு சுந்தர் பா.ஜனதாவுக்காக நக்கத் கான்' என்று ட்விட்டரில் தனது பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். குஷ்புவின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.