புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 4, 2020, 6:05 PM IST

தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ள குஷ்பு மகள் அவரது அம்மாவின் புடவையை கட்டி அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.


சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகல வள்ளியாக வலம் வருபவர் குஷ்பு. சோசியல் மீடியாவில் தனது கருத்துக்களை தைரியமாக பதிவிடக்கூடியவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அதில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது.  புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, 2 பெண் பிள்ளைகளுக்கு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: 

குஷ்பு அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட பதிவேற்றி வருகிறார்.  அதை பார்த்த பலரும் குஷ்புவின் இரண்டு மகள்களும் ஓவர் குண்டாக இருப்பதாக சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்து வந்தனர். இதையடுத்து கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இறங்கிய குஷ்புவின் இளைய மகள் அனந்திதா தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 

இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!

தனது கொழு, கொழு உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள அனந்திதா தற்போது சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். கிண்டலுக்கு ஆளான தனது உடல் எடையை குறைத்த அனந்திதா தனது ஸ்லிம் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அப்படி அனந்திதா பகிரும் புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ள குஷ்பு மகள் அவரது அம்மாவின் புடவையை கட்டி அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் உங்களது குழந்தைகள் புடவைகளை பகிர்ந்து கொள்ள தொடங்கும் போது, அந்த பெருமைக்குரிய தருணம் உங்களுக்கு புரியும் என்று பதிவிட்டுள்ளார்.  குஷ்பு மகளின் அசத்தல் போட்டோ இதோ... 

click me!