“இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 09, 2020, 06:59 PM IST
“இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

சுருக்கம்

இதையடுத்து தனது புதிய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ள குஷ்பு அத்துடன் ஸ்லிம் லுக்கிற்கான ரகசியத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் குஷ்பு, தனது பழைய நினைவுகளை தூசு தட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 

இதையும் படிங்க:  “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

ஏற்கனவே மகள்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய குஷ்பு, தானும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவு, சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மனதை கொள்ளையடிக்கிறார். சமீபத்தில் சும்மா கும்முனு இருந்த குஷ்பு செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் எல்லாமே தெரியுது”... கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து தனது புதிய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ள குஷ்பு அத்துடன் ஸ்லிம் லுக்கிற்கான ரகசியத்தையும் தெரிவித்துள்ளார்.“நல்ல உடற்பயிற்சி நல்ல ரிசல்டை தருகிறது” என்று பதிவிட்டிருந்த குஷ்புவிடம், இது எப்படி ஆச்சர்யமாக இருக்கே என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குஷ்பு,  நல்ல ஒர்க் அவுட் பண்ணுங்க.. அப்புறம் சாப்பாட்டிற்கு நோ சொல்லிடுங்க இது இரண்டு தான் என்னுடைய மாற்றத்திற்கு காரணம் என டிப்ஸ் கொடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!