“எப்ப பாரு இதே வேலையா போச்சு”... தனுஷ் படம் பற்றி தீயாய் பரவிய வதந்தி... தடுத்து நிறுத்திய தயாரிப்பாளர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 9, 2020, 4:58 PM IST
Highlights

இந்நிலையில் அசுரன் பட தயாரிப்பாளர் தாணு அந்த செய்தியை மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சூப்பர் ஸ்டார் மருமகன் என்பதையும் தாண்டி தனக்கென தனி ஸ்டைல், தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். தமிழில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனுஷுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தனுஷுன் அசத்திய நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் அசுரன். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. 

100 நாட்கள் வரை ஓடிய இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்தது. சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி என்பவரது வெக்கை நாவலின் தழுவலாக எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அசுரன் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய டாப் ஹீரோக்கள் போட்டா, போட்டி போட்டனர். 

தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள அசுரன் திரைப்படத்தில் வெங்கடேஷ், பிரியாமணி நடித்து வருகின்றனர். கன்னட ரீமேக்கில் சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை சீன மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக மிகப்பெரிய நிறுவனம் ஒன்று அசுரன் பட தயாரிப்பாளர் தாணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன நிலையில், மருமகன் தனுஷின் அசுரன் திரைப்படம் நேரடியாக சீன மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக வந்த தகவல்கள் அவரது ரசிகர்களை குஷியாக்கியது. 

இதையும் படிங்க: 

இந்நிலையில் அசுரன் பட தயாரிப்பாளர் தாணு அந்த செய்தியை மறுத்துள்ளார்.அவை முற்றிலும் வதந்தி என கூறியுள்ள தாணு, அசுரன் ரீமேக் உரிமையை கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இது ஆதாரமில்லாத வதந்தி. அதேபோல் சீனா மொழியில் அசுரன் படத்தை டப் செய்து வெளியிட உள்ளதாகவும், கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு அந்த விஷயத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 

click me!