
சமீப காலமாக நடிகைகள், அணியும் உடை, ஆபரணங்கள், ஆகியவற்றை வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைத்து பிரத்தேயகமாக டிசைன் செய்து அணிகிறார்கள். தங்களையும் வித்தியாசமாக காட்டிக்கொள்ள வேண்டும் என்றும், பலரது பார்வையும் தங்கள் மீது பட வேண்டும் என்பதற்காகவே இதற்காக பல லட்சம் வரை செலவு செய்து வருகிறார்கள்.
ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த கிம் கர்தாஷி என்கிற நடிகை, ஒரு படி மேலே போய் பல்லுக்கு பல கோடி செலவழித்து, வைரத்தால் ஆன, நகை ஒன்றை செய்துள்ளார்.
இவர் ஒரு சில ஹாலிவுட், திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சிறந்த தொலைகாட்சி பிரபலமாக அறியப்பட்டவர். ரியாலிட்டி ஷோக்களில் சிறந்து விளங்கியதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
தற்போது நான்காவது முறையாக கர்பம் தரித்திருக்கும் இவர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், பல கோடி செலவழித்து செய்யப்பட்ட, பல்லில் அணியும் நகை அணிந்தவாறு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த நகையை டாலி சோக்கென் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.
இவரின் இந்த புதுமையான நகை ஆர்வத்தை பார்த்து ரசிகர்கள் மட்டும் இன்றி பல பிரபலங்களும், வியர்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.