
நடிகை கஸ்தூரி தானும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக நடிகை பாயல் கோஷ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஆனால், அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, ’’சட்டத்தின் படி உறுதியான ஆதாரம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் அல்லது அனைவரின் பெயர்களையும் அழிக்கக்கூடும். எதுவும் நல்லதல்ல." என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் கஸ்தூரியிடம் "இது உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, “நெருக்கமானவர் என்ன? எனக்கே அது நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால்... அது அப்படியே தான் உள்ளது.”என்று தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட மொழிப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி, தனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.