தேர்தலை நல்ல நிறைஞ்ச ராகு காலத்தில அறிவிக்கிறாங்க.... சரிதான் !...கஸ்தூரியின் கவலை...

By Muthurama LingamFirst Published Mar 11, 2019, 9:40 AM IST
Highlights

நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  மாலை 5 மணி என்பது ராகு காலத்தில் அமைந்திருந்ததால் தேர்தல்  சில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  மாலை 5 மணி என்பது ராகு காலத்தில் அமைந்திருந்ததால் தேர்தல்  சில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்டாட்டார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பகுத்தறிவுக் கட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும் கூட கூடவே ஒரு ஜோதிடரை மடியில் கட்டிக்கொண்டே அலைவார்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ராகு கால நேரத்தில் மாலை 5 மணிக்கு மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டார். ராகு கால நேரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதால் பல கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த  சில அரசியல்வாதிகள் ராகு கால நேரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு பதிலாக வேறு நேரத்தில் வெளியிட வேண்டும் என்று விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவரும் இதையே விரும்பினார். ஆனாலும் திட்டமிட்டபடி, தேர்தல் ஆணையம் நேற்று மாலை 5 மணிக்கு ராகு கால நேரத்தில் தேர்தல் தேதியை வெளியிட்டது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யாராலும் யூகிக்கமுடியாத நிலையில் இந்த ராகுகால அறிவிப்பு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

இவ்வளவு பெரிய சங்கதிக்கு ட்விட் போடாமல் சும்மா இருக்க முடியுமா? வழக்கம்போல் தனது பக்கத்தில் ...  நல்ல நிறைஞ்ச ராகு காலத்தில அறிவிக்கிறாங்க....  சரிதான் ! என்று தட்டிவிட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி...

click me!