ஆர்யா-சாயிஷா வைரலாகிவரும் அட்டகாசமான திருமண புகைப்படங்கள்...

Published : Mar 10, 2019, 02:26 PM IST
ஆர்யா-சாயிஷா வைரலாகிவரும்  அட்டகாசமான திருமண புகைப்படங்கள்...

சுருக்கம்

’எஙக வீட்டு மாப்பிள்ளை’ புகழ் ஆர்யாவுக்கும் அவரது காதலி சாயிஷாவுக்கு இன்று காலை ஹைதராபாத்தில் எளிமையாக நடந்துமுடிந்தது. அந்நிகழ்வுகளை ஆர்யாவும் சாயிஷாவும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்க அவை வலைதளங்கலில் வைரலாகிவருகின்றன.


’எஙக வீட்டு மாப்பிள்ளை’ புகழ் ஆர்யாவுக்கும் அவரது காதலி சாயிஷாவுக்கு இன்று காலை ஹைதராபாத்தில் எளிமையாக நடந்துமுடிந்தது. அந்நிகழ்வுகளை ஆர்யாவும் சாயிஷாவும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்க அவை வலைதளங்கலில் வைரலாகிவருகின்றன.

நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு ’அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 39 வயது ஆகிறது.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதன்பிறகு பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடிவந்தனர். இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது.

சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டார்.

திரை பிரபலங்கள் பலரும் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் தங்களது திருமணம் நடைபெறும் என ஆர்யா-சாயிஷா ஜோடி தெரிவித்தது.

திருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் இன்னும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?