
எக்ஸிட் போல் முடிவுகளின் நிலவரம் தெரிந்துகொள்ள நாடே தொலைக்காட்சிகளின் முன்னால் நகம் கடித்துக்கொண்டிருக்கும்போது அக்கா நடிகை கஸ்தூரி மட்டும் சும்மா இருப்பாரா என்ன? வடிவேலுவின் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பிச்சுமணி டாட் காம் போல தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாக்குப்பதிவை சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பே துவங்கி தனது பக்தாஸை வாக்களிக்கச் சொல்லியிருக்கிறார்.
ட்விட்டர்லயே இவ்வளவு ஆக்டிவா இருக்கீங்களே உங்கள பார்லிமெண்டுக்கு அனுப்பினா எவ்வளவு ஆக்டிவா இருப்பீங்க? எங்க ஓட்டு கஸ்தூரி அக்காவுக்குத்தான்...என்று எப்படியாவது அவரை சினிமாவை விட்டுத்துரத்திவிடவேண்டும் என்ற கமெண்டுகளே அதிகம் இருந்த நிலையில் சரியாக மாலை ஆறு மணி நிலவரப்படி கஸ்தூரியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி பிரதமர் ஆகவேண்டும் என்று 60சதவிகிதம் பேரும், ராகுலுக்கு ஆதரவாக 25 சதவிகிதம் பேரும் புதியவர்தான் பிரதமர் என்று 15 சதவிகிதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள்.
இதிலிருந்து பக்தாஸ்களே அதிகம் கஸ்தூரிக்கு ஃபாலோயர்களாக இருக்கிறார்கள் என்கிற ரகசியம் வெளியே வந்துவிட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.