
சும்மாவே ஒண்ணுமில்லாத வெட்டி சமாச்சாரத்திற்கெல்லாம் ட்விட்டரில் கம்பு சுத்திவரும் கஸ்தூரியக்கா கமல் மேட்டரில் மட்டும் கருத்துச் சொல்லாமல் சும்மா இருப்பாரா? இந்த ஓவர் பப்ளிசிட்டியால் கமலுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கணித்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற கமலின் சர்ச்சைப்பேச்சுக்கு திரையுலகினர் பலரும் கமலை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து கூறிவரும் நிலையில் கஸ்தூரியும் தன் பங்குக்கு ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார். அதில்,...Kasturi Shankar@KasthuriShankar
கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே...பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ Kamal பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? I think... 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க ! என்று பதிவிட்டிருக்கிறார்.
அதற்குக் கீழே வந்த கமெண்டுகளுக்குப் பதிலளித்த கஸ்தூரி,...இந்து மதத்தை இழுத்தது தவறுதான். கமல் பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தவறு மறந்து மற்றவர்களின் மிரட்டலும் அபத்தங்களும் தான் நினைவில் நிற்கின்றன. அது கமலுக்கு பிளஸ்’ என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.