
நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா முதல் அரசியல் வரை தன்னுடைய மனதில் எழும் கேள்விகளாக இருந்தாலும் சரி, கருத்துக்களாக இருந்தாலும் சரி வெளிப்படையாக கூறி சர்ச்சையில் கூட சிக்கியுள்ளார்.
இதனால் இவருக்கான சமூக வலைதள பாலோவர்ஸ் அதிகம். ரசிகர்கள் இவரிடம் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கேள்விகளை முன்வைத்தால் கூட அதற்கும் நாசுக்காக பதில் சொல்வார்.
இந்நிலையில், இவர் தற்போது அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும், நடிகை பாடகி என பல்வேறு திறமைகளோடு விளங்குபவர் Jennifer Lopez உடல் பாகங்கள் ஒரு பக்கம் தெரியும் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.
மேலும் அதில் Jenifer Lopez வயது 49 என்றும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அப்படி இருந்தும் இவ்வளவு ஃபிட்னஸாக உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது ஒரு வித பொறாமையில் தான் என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு கஸ்தூரி என்ன பதில் சொல்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.