பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்கிறாரா கஸ்தூரி? அவரே வெளியிட்ட தகவல்!

Published : Aug 01, 2019, 06:46 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்கிறாரா கஸ்தூரி? அவரே வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது.  இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட மறுநாள், பிரபல மாடல் மீரா மிதுன் 16வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். 

பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட மறுநாள், பிரபல மாடல் மீரா மிதுன் 16வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். 

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேல் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில்,  பிக் பாஸ் வீட்டை விட்டு இதுவரை பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ஆகிய நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது 12 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இவர்களில் அடுத்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.  மேலும் வயல் கார்டு சுற்றிலும்,  சில பிரபலங்கள் என்ட்ரி ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அந்த வகையில் ஏற்கனவே 'ராஜா ராணி' சீரியல் நடிகை ஆலியா மானசா உள்ளே செல்ல உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இந்த சீரியலின் இயக்குனர் 'ராஜா ராணி' இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதால்,  ஆலியா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் சிலர்  ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.  இதுகுறித்து தற்போது நடிகை கஸ்தூரி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி   கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு  சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க.  எவ்வளவுதான் மறுக்கமுடியும் ?  இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்'. என்று கூறி தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!