கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !

Published : May 16, 2020, 05:03 PM IST
கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..!  இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !

சுருக்கம்

கோலிவுட் திரையுலகில், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், நடிகையாகவும் அறியப்படும் நடிகை கனிகா இதுவரை, வெளியிடாத ரகசியத்தை ரசிகர்களுக்காக, குறிப்பாக பெண்களுக்காக வெளியிட்டுள்ளார்.  

கோலிவுட் திரையுலகில், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், நடிகையாகவும் அறியப்படும் நடிகை கனிகா இதுவரை, வெளியிடாத ரகசியத்தை ரசிகர்களுக்காக, குறிப்பாக பெண்களுக்காக வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான,  '5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின்  கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', மற்றும் 'யாதும் ஒரே யாவரும் கேளீர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மா' குறும்படத் சமூக வலைத்தளத்தில் நல்ல விமரசங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் தன்னுடைய கர்ப்ப கால நினைவுகளையும், தன்னை பற்றியும் கனிகா கூறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் போது மிகப்பெரிய வயிறுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,  ‘’ஆமாம், என் குழந்தை பிறக்கும்போது  எடை அதிகமான தான் இருந்தான். எனக்கு அதில் பெருமையாகவும் இருந்தது. ஆனால் மற்ற  அம்மாக்களைப் போல பிரசவத்துக்குப் பிறகு என்னால் என்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை, காரணம் என் குழந்தை பிறந்த உடனேயே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டியிருந்தது. வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும், என் குழந்தை  உயிர் பிழைத்தான், அவன் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்தான்.

ஆனால் இந்த போஸ்ட் அதைப் பற்றியது இல்லை..  அதன் பிறகு  இயல்பு நிலைக்கு என்னால் எப்படி திரும்ப முடிந்தது என்பது பற்றியது தான், நான் ஒரு எளிய வழியை பின்பற்றினேன். உங்கள் வாழ்க்கை, உங்கள் உடல், உங்கள் உரிமை என்பதுதான் அது.

இன்றுவரை நான் எனது தோற்றத்தைப் பற்றியோ அல்லது குழந்தை வளர்ப்பு வழிகளைப் பற்றியோ மற்றவர்களின் கருத்துக்களை என் மீது திணிக்க விட மாட்டேன்.

நான் ஏன் ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று இன்றும் உங்களில் பலர் நினைக்கலாம்.  சினிமாவில் நடிப்பதற்காக இதைச் செய்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் அது உண்மை  இல்லை. நான் அதை எனக்காக செய்கிறேன். இது எனது ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நான் செய்யும் ஒரு முதலீடு .. எனவே ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். , ஃபிட்டாக இருங்கள்! நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் இன்று உங்கள் கைகளில் உள்ளது.

அதற்கு தினமும் சில மணி நேரம் செலவழித்தால் போதும். உங்களுக்கான அரோக்கியத்தை நீங்களே உங்களுக்கு பரிசளித்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் நிச்சயமாக தகுதியானவர், என்னால் இதை செய்ய முடியும் போது, உங்களால் ஏன் முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிகாவின் இந்த பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. நெட்டிசன்கள் தங்களுடைய லைக்கை குவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மர்ம மரணம்... கடைசியாக வெளியிட்ட வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி
Vijay- Trisha : மீண்டும் திரிஷா உடன் பயணம்...! வைரலாகும் விஜய் டிக்கட் உண்மையா?