Actress Kajol : திரையுலகினரை ரவுண்டு கட்டி தாக்கும் கொரோனா.... நடிகை கஜோலுக்கு தொற்று உறுதி

Ganesh A   | Asianet News
Published : Jan 30, 2022, 01:01 PM ISTUpdated : Jan 30, 2022, 01:03 PM IST
Actress Kajol : திரையுலகினரை ரவுண்டு கட்டி தாக்கும் கொரோனா.... நடிகை கஜோலுக்கு தொற்று உறுதி

சுருக்கம்

சமீபகாலமாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

தமிழில் நடிகர் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான, மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும், ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்களில், கணவன் மனைவி என இருவருமே போட்டி போட்டு நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை கஜோல் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். 47 வயதான கஜோல் , இன்ஸ்டாகிராமில் தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்து, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது சிவந்த மூக்கை யாருக்கு காட்ட வேண்டாம் என்பதனால் தனக்கு பதில் தனது மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதாக கஜோல் அவர் கூறியுள்ளார்.

கஜோலை போல் அவரது மகள் நைசாவும் செம்ம அழகாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், கொரோனா பாதித்த கஜோலுக்கு ஆறுதலாக கமெண்ட் செய்வதா, அல்லது அவரது மகள் நைசாவின் அழகை வர்ணிப்பதா என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். சமீபகாலமாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?