அக்கா இனியா கொடுத்த அட்வைஸ்..! தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்..! தாரா ஓபன் டாக்..!

 
Published : May 22, 2018, 07:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
அக்கா இனியா கொடுத்த அட்வைஸ்..!  தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்..! தாரா ஓபன் டாக்..!

சுருக்கம்

actress iniya sister introduce in tamil cinema

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

 

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில், “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம். இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான். படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.” என்று கூறினார்.

மேலும், “தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.” என்று அக்கா இனியா அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாய்க்கு அளித்த வாக்குறுதி! மரங்களுக்கு உயிர் கொடுக்கும் வில்லாதி வில்லன் ஷயாஜி ஷிண்டே: நெகிழ்ச்சிப் பின்னணி!
இது ஜன நாயகன் சாங் இல்ல தவெக சாங்; புயலாக வந்திறங்கிய ‘ஒரு பேரே வரலாறு’ அதிரடி அப்டேட்