பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்த பிரபல நடிகை...!

 
Published : May 27, 2018, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்த பிரபல நடிகை...!

சுருக்கம்

actress geetha kapoor death in hospital

'பாகியா' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். தற்போது 57 வயதாகும் இவர்,  100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்ந்தார். பின் மருத்துவ மனைக்கு கட்டணம் கூட செலுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். 

விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வரும், கீதா கபூரின் மகள் பூஜாவும் இதுவரை ஒரு முறை கூட தன்னுடைய தாயை வந்து பார்க்கவில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டு மருத்துவ மனையில் இருந்த நடிகைக்கு திரைத்துறையை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வந்தனர். 

பின் இவரை தயாரிப்பாளர் அசோக் என்பவர் மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்ததுடன் இவரை கவனித்துக்கொண்டார். 

இந்நிலையில் நேற்று இவருக்கு உடல் நிலை மிகவும் மோசமானதை தொடந்து, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி கீதா கபூர் மரணமடைந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் அசோக் கூறுகையில், எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. தன் மகன், மகள் வருவார்களா என்ற ஏக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!