காரை மோதிவிட்டு தப்பிய ஜி.வி.பிரகாஷ் பட நடிகை.. நடுரோட்டில் மண்டியிட வைத்த மக்கள்.. வைரல் வீடியோ..!

Published : Oct 19, 2021, 09:18 PM IST
காரை மோதிவிட்டு தப்பிய ஜி.வி.பிரகாஷ் பட நடிகை.. நடுரோட்டில் மண்டியிட வைத்த மக்கள்.. வைரல் வீடியோ..!

சுருக்கம்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக ரசிகர்கள் வசைபாடினர். இதையடுத்து நடிகை காயத்திரி சுரேஷ் விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக ரசிகர்கள் வசைபாடினர். இதையடுத்து நடிகை காயத்திரி சுரேஷ் விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

முந்தைய மலையாள வரவான கீர்த்தி சுரேஷை போலவே தோற்றம் கொண்டவர் மற்றொரு மலையாள நடிகை காயத்திரி சுரேஷ். இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தநிலையில், நடிகை காயத்திரி சுரேஷ், சில தினங்களுக்கு முன்னர் பார்ட்டி கொண்டாட தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் தோழிகள் அனைவரும் காரில் வெளியே சென்றனர். அப்போது இவர்கள் சென்ற கார் எதிரே வந்த வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் அஞ்சிய நடிகை காயத்திரி சுரேஷ் மற்றும் அவரது தோழிகள் காரை நிறுத்தாமல் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை விரட்டிச்சென்ற பொதுமக்கள் காரை மடக்கினர்.

காயத்திரி சுரேஷ் எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடாத பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து நடிகையை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.ஆனால் நடிகை காயத்திரி சுரேஷ் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக ரசிகர்கள் காயத்திரி சுரேஷை வசைபாடினர்.

இந்தநிலையில் சம்பவம் குறித்து விளக்க வீடியோ வெளியிட்டுள்ள காயத்திரி சுரேஷ், காரை தமது தோழி ஓட்டியதாக கூறியுள்ளார். நான் மது குடிக்கவில்லை. என்னை ஒரு நடிகை என பார்க்க வேண்டாம்.. அட்லீஸ்ட் ஒரு பெண் என நினைத்தாவது உண்மைக்கு மாறாக என்னை பற்றிய செய்திகளை வெளியிடுவதை தவிர்த்திருக்கலாமே என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை காயத்திரி சுரேஷ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Siragadikka Aasai : சிந்தாமணியின் திருவிளையாடல் ஆரம்பம்... ரோகிணியிடம் சிக்கப்போகும் மனோஜ்