
விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கும் நிலை தற்போது பெருகி வருகிறது. போதுமான அளவு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதால், விவசாயிகள் பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால் அடிக்கடி ஊருக்குச் சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள். இந்நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்தற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந்நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.