
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தற்போது சற்று அதிகரித்து விட்டது என்றே கூறலாம், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பல வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆனால் சிலருக்கு இதில் வெற்றி கிடைத்தாலும் சிலருக்கு வெற்றி வாய்புகள் கிடைக்காததால் வந்த வேகத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.
ஆனால், சிம்பு நடித்த 'போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வெற்றி கனியை பறிக்க முடியாததால். தன்னுடைய ஸ்டைல்லை டோட்டலாக மாற்றிக்கொண்டார்.
நல்ல திரைப்படம் கிடைத்தால் போதும், அதில் நாயகி வேண்டாம் கூட வேண்டாம் வலுவான கதாப்பாத்திரம் இருந்தால் மட்டும் போதும் தாரளமாக நடிக்கிறேன் என கூறி குணசித்திர நடிகையாக மாறினார். இவரின் அதிர்ஷ்டம் இவர் நடித்த படங்கள் அடிக்கடுக்காக வெற்றி பெற்றது.
குணசித்திர வேடங்களிலும் நடித்து கொண்டு தற்போது, சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'நீயா 2' படத்தில் நடித்து வரும் வரலட்சுமியின் கதாப்பாத்திரம் குறித்த ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
நீயா 2 படத்தில் நடிகை வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன என்பதை விளக்கும் போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கமல் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நீயா படத்தின், இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் காமெடி நடிகர் பாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை எல்.கே.சுரேஷ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகை வரலட்சுமி இதில் பாம்பாக நடிக்கிறார் என்பது இந்த போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது.
இதே போல் இவருடைய தந்தை சரத்குமாரும் இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் 'பாம்பன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். நீயா 2 படத்திற்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பாவை தொடர்ந்து மகளும் பாம்பாக உருவெடுத்துள்ளது சினிமா உலகில் சற்று பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.