
பல தொலைக்காட்சிகள் தங்களின் TRPயை உயர்த்துவதற்காக, மக்களின் குறைகளை தீர்த்து வைக்கிறோம் என்கிற பெயரில் கட்ட பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
பொதுவாகவே மற்றவர்களின் கதையா தெரிந்துகொள்வதில் பலர் ஆர்வம் காட்டுவதால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு குறையாமல் இருக்கிறது.
ஆனால் பொய் சொல்லி அழைத்து வரப்பட்டு, உலகத்திற்கு முன் கூனி குறுகி நிற்கும் கலந்துகொள்பவர்களின் மனநிலையை யாரும் யோசித்து கூட பார்ப்பதில்லை.
பலர் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின் தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு என்பது உண்மை.
இந்நிலையில் இது போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும், லட்சுமி ராமகிருஷ்ணன், ஊர்வசி,கீதா,குஷ்பூ போன்ற பலர் பொது மக்களை குறிவைத்து இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி,பலரை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதக புகார்கள் எழுந்தும் அவர்கள் மீது சரியான நடவடிக்கை இதுவரை இல்லை.
மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் அங்கு வருபவர்களை தாறுமாறாக திட்டுகிறார் என்றும், ஊர்வசி நடத்தி வரும் நிகழ்ச்சியில் அவரே குடித்துவிட்டு வந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார் என தற்போது சொல்லப்படுகிறது.
அதே போல் நடிகை கீதா, சமீபத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் இடையே மிக மோசமாக பேசியது பரவலாக பேசப்பட்டது. நடிகை குஷ்பூ சம்பீபத்தில் தான் பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த சுதந்திர நாட்டில் நாம் செய்த தவறை கண்டிப்பதற்கும், தண்டனை கொடுக்கவும் அரசாங்கம் இருக்கிறது, நம்மை பற்றி பேசவும் நாம் செய்த குற்றத்தை தண்டிக்கவும் இவர்கள் நீதிமான்கள் அல்ல.
இவர்கள் நம்மை அழைத்து அக்கறையாக பேசுவது அவர்களின் தொலைக்காட்சி TRP க்காக மட்டுமே சிந்தித்து செயல்படுவோம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.