17 வருடத்திற்கு பின்... மீண்டும் மன்மதராசா பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயா சிங்! இதுதான் பிறந்தநாள் ட்ரீட்: வீடியோ

Published : May 19, 2020, 03:10 PM IST
17 வருடத்திற்கு பின்... மீண்டும் மன்மதராசா பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயா சிங்! இதுதான் பிறந்தநாள் ட்ரீட்: வீடியோ

சுருக்கம்

90 'ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் சாயா சிங். இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த, திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற, 'மன்மதராசா' பாடலுக்கு கிட்ட தட்ட 17 வருடம் கழித்து, அந்த பாடலின் நடன இயக்குனர் சிவஷங்கர் மாஸ்டருடன் ஆட்டம் போட்டுள்ளார்.   

90 'ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் சாயா சிங். இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த, திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற, 'மன்மதராசா' பாடலுக்கு கிட்ட தட்ட 17 வருடம் கழித்து, அந்த பாடலின் நடன இயக்குனர் சிவஷங்கர் மாஸ்டருடன் ஆட்டம் போட்டுள்ளார். 

கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங். பின், நடிகர் தனுஷ் நடித்த, 'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். முதல் படமே, இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'மன்மதராசா பாடல்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, கவிதை, அருள், ஜெய் சூர்யா, உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்தாலும், முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை. தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்தார். 

பின் கடந்த 2012 ஆம் ஆண்டு, குணச்சித்திர நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 'அனந்தபுரத்து வீடு' படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கினர். பின்னர் இரு வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்ட திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்து கொண்டார் சாயா சிங். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு 'உயிரே உயிரே' படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின் பவர் பாண்டி, உள்குத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம், ஆக்ஷன் போன்ற படங்களில் நடித்தார். மேலும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து, 'ரன்' என்கிற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக, நடிகை சாயா சிங், மன்மத ராசா பாடலுக்கு, அந்த பாடலின் நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டருடன் நடனமாடி, வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நந்தினிக்காக சுந்தரவள்ளியை பகைத்துக்கொள்ளும் சூர்யா... சவாலில் வெல்லப்போவது யார்? மூன்று முடிச்சு சீரியல்
ரெக்கார்டு பிரேக்கிங் வசூல்... பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?