
தமிழில் 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் சிம்புவின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து லாடம் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர் சார்மி.
காதல் தோல்வியின் காரணமாக, திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குறைந்து விட்டது. இதனால் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் இவருக்கும், பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்துக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகை சார்மி....
நானும் பூரி ஜெகன்நாத்தும், சேர்ந்து படம் தயாரிக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வேலை பார்ப்பதால் எங்களுக்கு இடையே காதல் என்று பேசுகின்றனர். முதலில் ஆண் பெண் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்தல் அவர்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது மாறவேண்டும் என்று மிகவும் கோவமாக கூறினார்.
மேலும் தனக்கு காதல், திருமணம், மீது நம்பிக்கை இல்லை என்றும், தற்போது நான் சுதந்திரமாக உள்ளேன். திருமணம் செய்தால் கணவர் சொல்லும் படி தான் நடிக்க வேண்டும் என்பது போல் பல விதிமுறைகள் உள்ளது. அதனால் அப்படிப்பட்ட திருமணமே தேவையில்லை என்று சார்மி தெரிவித்துள்ளார்.
இப்போது தன்னிடம் பங்களா, கார் என மிகவும் சொகுசாக உள்ளேன். நினைத்த நேரம் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சாப்பிட பணம் உள்ளது. அதனால் யாரையும் நான் நம்ப வேண்டிய அவசியம் இல்லை திருமணமும் செய்யும் முடிவிலும் நான் இல்லை என சார்மி தெளிவாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.