
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய உண்மையான குணத்தால், தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. இந்நிலையில் இவர் நேற்றைய தினம் தன்னுடைய, 27 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
மேலும் ரசிகர்கள் சிலரும் எப்படி, விஜய் - அஜித் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுகின்றனரோ அதே போல் ஓவியாவின் பிறந்த நாளையும் சில ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓவியாவும் தன்னுடைய ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் லைவ் சாட் செய்தார். அப்போது சில ரசிர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார்.
ஒரு ரசிகர் ஓவியா உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது என கேட்டபோது... சென்னை என்று தெரிவித்தார். ஏன் என்றால் இங்கு தான் பாகுபாடின்றி அனைவரும் உள்ளனர் என்றார்.
மற்றொரு ரசிகர்... போர் அடித்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்டதற்கு, பாட்டு கேட்பேன் மற்றும் படம் பார்ப்பேன் என்று ஓவியா பதிலளித்தார்.
மற்றொரு ரசிகர் மிகவும் சவரிஸ்யமாக ஓவியாவிடம், எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க, அப்படி ஆசை இருந்துச்சுனா சொல்லுங்க நானே உங்கள கல்யாணம் பண்ணிக்குற என்று தன்னுடைய காதலை அழகாக வெளிப்படுத்தினார். இதற்கு ஓவியா மிகவும் கூலாக அந்த ரசிகரிடம் உங்கள் பயோடேட்டாவை அனுப்புங்க என்று அவருடன் கூறி அதிர்சியாக்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.