டவல் போல் உடை... பிளாஸ்டிக் கவருக்குள் வித்தியாசமான போட்டோ ஷூட் ! விழுப்புணர்வு ஏற்படுத்தும் பிந்து மாதவி!

Published : May 16, 2020, 07:36 PM IST
டவல் போல் உடை... பிளாஸ்டிக் கவருக்குள் வித்தியாசமான போட்டோ ஷூட் ! விழுப்புணர்வு ஏற்படுத்தும் பிந்து மாதவி!

சுருக்கம்

பிரபல நடிகை பிந்து மாதவி, வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் இந்த லாக் டவுன் நேரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  

பிரபல நடிகை பிந்து மாதவி, வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் இந்த லாக் டவுன் நேரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை பிந்து மாதவி:

தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார்.

தமிழ் படங்கள் :

அந்த வகையில் இதுவரை, வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 , போன்ற பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் கழுகு 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 

தற்போது நடித்து வரும் படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தமிழில் 'மாயன்' மற்றும் 'யாருக்கும் அஞ்சலே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஏமாற்றிய பிக்பாஸ்:

பிந்து மாதவி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இதில் கலந்து கொண்டு விளையாடிய அனைவர்க்கும் பட வாய்ப்புகள் கிடைத்த போதிலும் பிந்து மாதவிக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

விழிப்புணர்வு போட்டோ ஷூட் :

இதனால் விதவிதமான போட்டோ ஷூட் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிந்து, தற்போது, இந்த லாக் டவுன் நேரத்தில் முடிந்தவரை... பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

டவல் போன்ற உடையுடன்... பிளாஸ்டிக் கவருக்குள் இருந்தபடி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?
காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!