போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகிறார் நடிகை பானுப்ரியா...?

By Muthurama LingamFirst Published Jan 30, 2019, 3:35 PM IST
Highlights

குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோவின் கீழ் நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபியும் ஆந்திர போலீசாரால் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோவின் கீழ் நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபியும் ஆந்திர போலீசாரால் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. 

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சந்தியா என்ற சிறுமியை அவரும் அவரது சகோதரரும் உடல் ரீதியாக தொந்தரவுகள் செய்வதோடு, சம்பளம் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் சந்தியாவின் தாயார் பத்மாவதி புகார் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து சந்தியாவின் மீது திருட்டுக் குற்றம் சாட்டிய பானுப்ரியா, சந்தியாவுக்கு வயது 14 தான் என்பது தனக்குத் தெரியாது என்று மழுப்பினார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை மீட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்ப்படுத்தினார்கள். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பானுப்ரியாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க, ஆந்திர குழந்தைகள் நலத்துறை, அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 14 வயதுடைய சிறுமியை வீட்டில் வேலை அமர்த்தியது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதையொட்டி, நடிகை பானுப்ரியா எந்த நேரத்திலும் ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!