’அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க'...கடுப்பான நடிகை அனுபமா...

Published : Nov 23, 2019, 11:41 AM IST
’அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க'...கடுப்பான நடிகை அனுபமா...

சுருக்கம்

’பிரேமம்’படத்தில் அறிமுகமாகி, கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கைவசம் தற்போது தெலுங்குப் படங்களும் இல்லை. காரணம் அனுபமா கிளாமராக நடிக்க விரும்பாததே என்று சொல்லப்படுகிறது.

கைவசம் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லாத நிலையில் தன்னைப் பற்றி வெளிவரும் கிசுகிசுக்களுக்கு ‘அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க’ என்று மிக காட்டமாகப் பதிலளித்துள்ளார் நடிகை அனுபமா பரமேஷ்வரன்.

’பிரேமம்’படத்தில் அறிமுகமாகி, கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கைவசம் தற்போது தெலுங்குப் படங்களும் இல்லை. காரணம் அனுபமா கிளாமராக நடிக்க விரும்பாததே என்று சொல்லப்படுகிறது.

இடையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. உடனடியாக அதை மறுத்த அனுபமா அது வெறுமனே நட்புதான் என்று சமாளித்தார். அதன் அடுத்த கட்டமாக தற்போது இந்தி நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின. இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா, ''காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம். இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். அவங்கவங்க அவங்கவங்க வேலைய மட்டும் பாருங்க’என்று பயங்கர கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்