எடை குறைக்க சர்ஜரி... விஜய் பட வாய்ப்பு... எக்கசெக்க காதல்... உண்மையை போட்டுடைத்த நடிகை அஞ்சலி!

Published : Apr 10, 2019, 06:54 PM IST
எடை குறைக்க சர்ஜரி...  விஜய் பட வாய்ப்பு... எக்கசெக்க காதல்...  உண்மையை போட்டுடைத்த நடிகை அஞ்சலி!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்துக்கே, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.  

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்துக்கே, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

தொடர்ந்து 10 வருடங்களை கடந்து முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள நடிகைகளில் இவரும்  ஒருவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், அவரை பற்றி எழும் கிசுகிசு அனைத்திற்கும் வெளிப்படையாக பதில் கூறியுள்ளார்.

நடிகர் ஜெய்யுடனான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக  கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எப்போது காதலித்தேன்...? நான் அப்படி ஒரு முறை கூட அப்படி கூறியது இல்லை. அவர்களே கிசு கிசு எழுதுகிறார்கள். திடீர் என நிறுத்து விடுகிறார்கள் என பதில் கொடுத்துள்ளார்.

விஜய் படத்தில் எப்போது நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு... விஜய் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். காரணம் சென்னைக்கு வந்து தமிழ் மொழி,  தெரியாத போதிலும் முதலில் பார்த்தது 'ஷாஜகான்' திரைப்படம்.  ஆகவே அவருடைய பட வாய்ப்பு கிடைத்தால் ஏகுறி குதித்து முதலில் போய் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்தீர்களா என கேட்ட கேள்விக்கு... அப்படி எதுவும் இல்லை, ஜிம் மற்றும் அதற்கு ஏற்ற போல் உணவு வழக்கத்தை கையாண்டாலே எடை தானாக குறைந்து விடும் என கூறினார்.

அஞ்சலியிடம் காதல் ப்ரோபோசல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு... பொதுவாக பெண்கள் என்றாலே லவ் ப்ரோபோசல் வரும் தான். அதே போல் எனக்கும் வந்தது. பள்ளியில் படிக்கும் போதே பலர் தன்னிடம் காதலை கூறியுள்ளனர். அவர்கள் சாக்லேட் கொடுத்தால் வாங்கி சாப்பிட்டு விடுவேன். பூ கொடுத்தால் அவர்களிடமே கொடுத்து விடுவேன் என மிகவும் ஜாலியாக பேசியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!