"வா, வா பக்கம் வா" என ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை... படுகவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட ஆன்ட்ரியா....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 23, 2019, 02:08 PM IST
"வா, வா பக்கம் வா" என ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை... படுகவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட ஆன்ட்ரியா....!

சுருக்கம்

தற்போது விஜய்யின் தளபதி 64 படத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா, இசை நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் படுகவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு பாடல் பாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக "பச்சைக்கிளி முத்துச்சரம்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா. அதன்பின்னர் ஆண்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை போன்ற படங்கள் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் ஆன்ட்ரியா, கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டுவதில் தயங்கியது இல்லை. வடசென்னை படத்தில் கூட ஆன்ட்ரியா டாப்லெஸ் சீனில் நடித்தது, சோசியல் மீடியாவில் வைரலானது.

நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் ஆன்ட்ரியா. மேலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஆன்ட்ரியா, இசை நிகழ்ச்சிகளிலும் படுகவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார்.

சமீபத்தில் திருமணமான ஆண் ஒருவருடனான தொடர்பில் இருந்ததாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட தான் தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது விஜய்யின் தளபதி 64 படத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா, இசை நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் படுகவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு பாடல் பாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கால் முழுவதும் தெரியும் படியாக ஷார்ட் டாப்பில் வா, வா, பக்கம் வா என்ற பாடலைப் பாடி ரசிகர்களை  கிறங்கடித்துள்ளார். ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!