அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 16, 2020, 03:52 PM IST
அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

சுருக்கம்

தற்போது மும்பையில் பிரபல பாடகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் லைப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருந்த போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில் ஏற்றுக்கொண்ட அமலா பால் பின்னர் படங்களில் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். 

அதன் பின்னர் ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

இதையும் படிங்க: நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் வடநாட்டு யாஷிகா ஆனந்தின் காட்டுமிராண்டித் தனமான கவர்ச்சி..!

சமீப காலமாக சர்ச்சை நாயகியாக வலம் வரும் அமலா பால், தோழியுடன் போட்ட ஹாட் டான்ஸ் முதல் காதலருடன் காற்று போக முடியாத படி கட்டியணைத்து எடுத்த போட்டோஸ் வரை அனைத்துமே சோசியல் மீடியா வைரல். தற்போது இந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ள அமலா பால், மும்பையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

தற்போது மும்பையில் பிரபல பாடகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் லைப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரைகுறை ஆடையில் மும்பையின் நடுரோட்டில் நின்றபடி முத்தம் கொடுப்பது போன்ற போஸ் கொடுத்து அமலா பால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அமலா பால் அந்த முத்தத்தை யாருக்கு கொடுத்திருப்பார் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!