
அண்மையில் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படத்தன் இகை வெளியீட்டு விழா நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், முருகதாஸ், ரகுமான், நடிகர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் யோகி பாபு, சன் பிக்சர்ஸ் படத்தில் அண்ணன் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனக்க மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
நான் முடிவெட்டுவதேயில்லை என்றும், எனக்கு மூளை சோறு போடவில்லை, முடிதான் சோறு போடுவதாகவும் யோகி பாபு தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பல ஹீரோக்கள் இருக்கிறார்கள்…நடிகர் விஜய் எப்படி? என நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் பிரசன்னா கேட்டபோது, விஜய் அண்ணன் வேற லெவல் என கூறியதும் ரசிகர்களின் கைதட்டல் சத்தம் நெடு நேரம் நீடித்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.