
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதன் இசைவெளியீட்டு விழாவில் மீடியா ஜாம்பாவான் கலாநிதி மாறன் முதன் முதலாக மேடை ஏறி பேசினார். சிம்டாங்காரன் பாடல் தனக்கு போட்டுக் காட்டப்பட்டதாகவும், முதலில் புரியாத அந்தப் பாடல் பின்னர் சூப்பர் ஹிட்டானது என கூறினார். ஆடியோவிலேயே இத்தனை ஹிட்டான இந்தப் பாடல் விஜயின் நடிப்பில், முருகதாசின் இயக்கத்தில் எப்படி வெற்றி அடையபோகுது பாருங்கள் என தெரிவித்தார்.
விஜய் தொழில் மீது மிகுந்த பக்தியுள்ளவர் என்றும், ஷுட்டிங் என்றால் சரியான டைமுக்கு வந்து விடுவார் என்றும் பாராட்டினர். தமிழ் திரையுலகில் எளிமையான இரு மனிதர்கள் உள்ளனர். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றொருவர் விஜய் என கூறினார்.
நடிகர் விஜய் எல்லா கேரக்டரும் பண்ணிவிட்டார். இனி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றும், அவர் அகில இந்திய லெவலுக்கு போக வேண்டும் என்றும் பாராட்டினர்.
இதே போல ரகுமானின் தமிழ்ப்பற்று குறித்தும் சிலாகித்துப் பேசினார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன் டைமுக்குள், சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தாகவும் பாராட்டிப் பேசினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.