எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்! மாணவர்களை எச்சரித்த நடிகர் விவேக்!

Published : Jul 24, 2019, 05:30 PM IST
எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்!  மாணவர்களை எச்சரித்த நடிகர் விவேக்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான விவேக், தன்னுடைய காமெடி நடிப்பிலும் கூட சமூக கருத்துக்களை புகுத்தி, எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் வெளிப்படுத்துபவர்.  மேலும் இது வார்த்தையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, சமூக கருத்துக்கொண்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.  

இந்நிலையில் நேற்று பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இருவர் ஒரு மாணவரை பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கிய வைத்தது.

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் அருண் மொழி செல்வன் அந்த இரு மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளார்.  தற்போது இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில், கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக்,  மாணவர்கள் கையில் பட்டாகத்தி.கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும்.இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும்; கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும்.ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும். என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்