”விசாரணைக்கு பின் தெரியும்” - நடிகர் விஷால் பேட்டி...

 
Published : Sep 12, 2017, 09:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
”விசாரணைக்கு பின் தெரியும்” - நடிகர் விஷால் பேட்டி...

சுருக்கம்

Actor Vishal has said that one person has been caught stealing images on the website and that the detainee belongs to any website.

திருட்டுத்தனமாக படங்களை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ளார்  எனவும், கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின் தெரியவரும் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

புதிய திரைப்படங்கள் திரையில் வெளியான சில நாட்களிலேயே இணையதளத்தில் வெளியாகிவிடும். இதற்கு போலீசார், சினிமா பிரபலங்கள் எவ்வளாவோ முட்டுக்கட்டை போட்டும் அதை தடுக்க முடியவில்லை. 

இந்நிலையில், புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் தேர்வானதும் எடுத்த முதல் அதிரடி நடவடிக்கை திருட்டு தனமாக இணையதளத்தில் வெளியாகி வரும் திரைப்படத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பது. 

அந்த வகையில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்காவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், பாகுபலி 2 இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இதற்கு காரணமான தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தின் அட்மின் கவுரி சங்கர் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து நடிகர் விஷால் திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு வருகை தந்தார். 

பின்னர், செய்தியாளர்களை  சந்தித்த அவர், திருட்டுத்தனமாக படங்களை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ளார்  எனவும், கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின் தெரியவரும் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!