தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மின் கைது - போலீசார் அதிரடி...

 
Published : Sep 12, 2017, 09:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மின் கைது - போலீசார் அதிரடி...

சுருக்கம்

Admine Gauri Shankar of the Tamil Rockers Collage is arrested by the Tiruvallikini police station.

தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தின் அட்மின் கவுரி சங்கர் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதிய திரைப்படங்கள் திரையில் வெளியான சில நாட்களிலேயே இணையதளத்தில் வெளியாகிவிடும். இதற்கு போலீசார் சினிமா பிரபலங்கள் எவ்வளாவோ முட்டுக்கட்டை போட்டும் அதை தடுக்க முடியவில்லை. 

இணையதளத்தில் படம் வெளியானால் மக்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் அந்த படத்தை எடுப்பதற்கு திரையுலகினர் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நாம் நேரில் பார்க்காமல் புரியாது என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்நிலையில், புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் தேர்வானதும் எடுத்த முதல் அதிரடி நடவடிக்கை திருட்டு தனமாக இணையதளத்தில் வெளியாகி வரும் திரைப்படத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பது. 

அந்த வகையில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்காவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், பாகுபலி 2 இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இதற்கு காரணமான தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தின் அட்மின் கவுரி சங்கர் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேலூர் மாவட்டம் திருபத்தூரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!