
இளம் பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதற்கு, பிரபல மலையாள நடிகரும் சிம்பு, விஷால், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள, நடிகர் விநாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விநாயகன், பெண் சமூக சேவகி மிருதுளா சசிதரன் என்பவர் சமூக வலைதள, பதிவை பார்த்து விட்டு, தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டும் இன்றி, மிருதுளா சசிதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், மிருதுளா வன்மையாக அவரை கண்டித்ததுடன், காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் வினாயகனை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், மிருதுளா கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்பற்றா பகுதி போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் விநாயகன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.