
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், நடிகர் பாக்யராஜின் அணியான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் மோத உள்ளனர்.
கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த பலர், இப்போது சுவாமி சங்கரதாஸ் அணியில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
எனவே தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான பிரச்சாரம், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்களின் வாக்குகள் அதிகம் உள்ளதால் இரண்டு தரப்பினரும் நாடக நடிகர்களின் வாக்குகளை பெற முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சீமான், எந்த அணிக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.