‘தக் லைஃப்’ படத்துடன் மோதும் நடிகர் விமலின் படம்..ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published : May 26, 2025, 05:06 PM IST
thug life vs paramasivan fathima

சுருக்கம்

நடிகர் விமலின் 34-வது திரைப்படமான ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

விமல் நடித்துள்ள ‘பரமசிவன் பாத்திமா’

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் விமல். இவர் தற்போது தனது 34-வது திரைப்படமான ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் இசக்கி கர்வண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இசக்கி கர்வண்ணன் இதற்கு முன்பாக ‘குடிமகன்’, ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் கதைக்களம்

தற்போது விமல் மற்றும் சாயாதேவியை வைத்து ‘பரமசிவன் பாத்திமா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஒரு மலைக் கிராமத்தில் இரு வேறு மதத்தினரால் ஏற்படும் மத சண்டை குறித்து பேசக்கூடிய திரைப்படமாக இந்த படம் அமைந்துள்ளது. இரு வேறு மதத்தைச் சேர்ந்த விமல் மற்றும் சாயாதேவி இருவரும் காதலிக்கின்றனர். அவர்களின் காதலால் கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் பேசுகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

‘தக் லைஃப்’ படத்துடன் மோதும் விமல் படம்

இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, கூல் சுரேஷ், காதல் சுகுமார், அதிரா, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜூன் 5-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் படத்துடன் மோதும் வகையில் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!