
2005-ம் ஆண்டு வெளியான ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். நடிகர் விஜயின் உறவினரான இவர், அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். கடைசியாக ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வில்’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசரை பார்க்கும் பொழுது இது ஒரு திரில்லர் படம் என தெரிகிறது. சோனியா அகர்வால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் மோகன் ராமன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘ஃபூட் ஸ்டெப்ஸ் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
கவனத்தை ஈர்க்கும் வசனங்கள்
டீசரின் ஒரு காட்சியில், “சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இரண்டும் வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீயோ, நானோ, அவர்களோ கிடையாது. ஓட்டு போடுறவன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.