வெடிக்கிறது அடுத்த பூகம்பம்... காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்... மாட்டிக்கொண்டாரா விமல்? 

 
Published : Jan 25, 2018, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
வெடிக்கிறது அடுத்த பூகம்பம்... காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்... மாட்டிக்கொண்டாரா விமல்? 

சுருக்கம்

actor vimal cheeting money producer complient police

அறிமுகம்:

நடிகர் விஜய் நடித்த 'கில்லி' ,அஜித் நடித்த 'கிரீடம்', உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக அறிமுகமாகி 'பசங்க' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'களவாணி' திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. 'வாகை சூடவா' படத்திற்காக இவர் தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார்.

தயாரிப்பில் விமல்:

இந்நிலையில் தற்போது விமல் 'மன்னர் வகையறா' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். இந்தப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை தயாரித்து கொடுத்த வகையில் விமல் பணத்தை மோசடி செய்து விட்டதாக சாலிகிராமத்தை சேர்ந்த பி.ஏ.கணேசன் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது:

நடிகர் விமல் மீது, கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது, நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுப்படுள்ளேன், ஜி.கே.ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் விமலுடன் இணைந்து ஜி.கே.ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார்.

குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஆனால் அந்த அறிவிப்பில் தன்னுடைய பெயர் இல்லை.

இதுவரை 'மன்னர் வகையறா' படத்தை தயாரிக்க நான் 1.75 கோடி கொடுத்துள்ளேன், ஆகவே எனக்கு படம் வெளியானதும் ரூ.2.15 கோடி தரவேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது.

ஆனால் தன்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடிக்கிறது என்றும் மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். 

நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப்பார்கிறார். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தரவேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி புகார் மனுவில் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!