கொல மாஸ் லுக்கில் விக்ரம் பிரபு... வைரலாகும் “புலிக்குத்தி பாண்டியன்” ஃபர்ஸ்ட் லுக்...!

முதலில் இந்த படத்திற்கு பேச்சி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது புலிக்குத்தி பாண்டியன் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

Actor Vikram prabhu Pulikkuthi Pandi First look released

தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்த ஜோடி மீண்டும் தற்போது இணைந்துள்ள திரைப்படம் “புலிக்குத்தி பாண்டியன்”. முன்னணி இயக்குனரான முத்தையா கொம்பன், குட்டி புலி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர்.தற்போது விக்ரம் பிரபு முத்தைய்யா இயக்கியுள்ளார். 

Actor Vikram prabhu Pulikkuthi Pandi First look released

Latest Videos

முதலில் இந்த படத்திற்கு பேச்சி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது புலிக்குத்தி பாண்டியன் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முரட்டு தாடி, மீசையுடன் விக்ரம் பிரபு செம்ம மிரட்டலாக இருக்கிறார்.  ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம டெரர் லுக்கிற்கு மாறி இருக்கும் விக்ரம் பிரபுவின் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 14ம் தேதி நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image