
நடிகர் விக்ரம் 'கடாரம் கொண்டான்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமான, 'ஆத்யா வர்மா' படத்தின் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' படத்தில் நடித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆமா நான் தப்பு பண்றேன்... தில்லா ஒத்துப்பேன்... பீட்டர் பால் முன்னாள் மனைவிக்கு சரியான பதிலடி கொடுத்த வனிதா!
இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் கொல்கத்தாவிலும் நிறைவடைந்தது. மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்ற போது, உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் உடனடியாக இந்தியா திரும்பினர். விக்ரமின் 58 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை 7 க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக, கே.ஜி.எப். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்கிறார். இந்த படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். “டிமாண்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” என வித்தியாசமான கதைகளை கையாண்ட அஜய் ஞானமுத்துவுடன் சீயான் விக்ரம் கைகோர்த்துள்ளதால் ஒட்டு மொத்த திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
இதையும் படிங்க: "என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...!
இந்த படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சரியான நேரத்திற்கு பாடலை வெளியிட்டு சீயான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.