
INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற விருது 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் 2018ஆம் ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியல் ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயர் இடம்பெற்றிருந்தது.
விஜய் தவிர உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ‘ஏஜென்ட்’ திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, ‘சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட்’ நடிகர் ஜோஷுவா ஜாக்சன், ‘சைட் சிக் கேங்’ நடிகர் அட்ஜெட்டே அனாங், ‘எல் ஹெபா எல் அவ்டா’ நடிகர் ஹசன் மற்றும் ‘தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல்’ பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இதில் சிறந்த சர்வதேச நடிகராக நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகம் முழுவதும் இருந்து பல்துறை சார்ந்த கலைஞர்கள் பங்கெடுத்த ஐஏஆர்ஏ விருது வழங்கும் விழா செப்டம்பர் 22ஆம் தேதி லண்டனில் நடைபெற்றாலும் நிகழ்வின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிடவில்லை.
இந்நிலையில் இன்று சர்வதேச நடிகர் விருது வென்ற தளபதி விஜய்யின் புகைப்படத்தை "ஐஏஆர்ஏ" வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. “பன்முக திறமைக் கொண்ட விஜய்க்கு இந்த விருதை வழங்கப் பெருமை கொள்கிறோம்” என விருதுக்குழு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.