சுபஸ்ரீ மரணம்: பழிபோட லாரி ஓட்டுநரும் பேனர் அச்சடித்தவரும்தான் கிடைத்தார்களா..? நடிகர் விஜய் கோபம்!

Published : Sep 20, 2019, 07:04 AM ISTUpdated : Sep 20, 2019, 10:36 AM IST
சுபஸ்ரீ மரணம்: பழிபோட லாரி ஓட்டுநரும் பேனர் அச்சடித்தவரும்தான் கிடைத்தார்களா..? நடிகர் விஜய் கோபம்!

சுருக்கம்

சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கமாட்டோம் என அறிவித்தன. இதேபோல நடிகர் விஜயும் தங்கள் ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவிலும் சுபஸ்ரீ மரணத்தையும், அவர் இறந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகளையும் ஆதங்கத்தோடு நடிகர் பேசியிருக்கிறார்.      

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரி டிரைவர், பேனர் அச்சடித்தவர்கள் மீது பழி போடுவதை நடிகர் விஜய் ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய நடித்துள்ள‘பிகில்’ படம் விரைவில் வெளி வர உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகன் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் குறித்தும் நடிகர் விஜய் பேசினார்.
“பேனரால் இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு நான் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். சுபஸ்ரீ இறந்த விஷயத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யவில்லை. லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகிறார்கள். இதுபோன்ற சமூக பிரச்னைகளுக்கு 'ஹாஷ்டேக்' போட வேண்டும்.  சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாமே சரியாகிவிடும்.” என்று நடிகர் விஜய் பேசினார்.
பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கமாட்டோம் என அறிவித்தன. இதேபோல நடிகர் விஜயும் தங்கள் ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவிலும் சுபஸ்ரீ மரணத்தையும், அவர் இறந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகளையும் ஆதங்கத்தோடு நடிகர் பேசியிருக்கிறார்.    

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!