புதிதாக வாங்கிய Lexus LM காரை ஓட்டி சென்ற தளபதி விஜய்! இந்த காரின் சிறப்பு என்ன? வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Aug 13, 2024, 11:08 PM IST

தளபதி விஜய் வாங்கியுள்ள Lexus  LM காரின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
 


கார் பிரியரான தளபதி விஜய், அண்மையில் ஆசையாக வாங்கிய ரோல் ராய்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில்... அப்படியே புதிதாக லான்ச் செய்யப்பட்டுள்ள Lexus LM காரை வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தளபதி வாங்கியுள்ள காரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இன்று 200 கோடி சம்பளம் பெரும் உச்ச நடிகராக உருவெடுத்துள்ள விஜய், தன்னுடைய இளம் வயதில் இருந்தே ஒரு கார் பிரியர். தன்னுடைய கார்கள் சேகரிப்புக்கு என்றே, மிகப்பெரிய பார்க்கிங் ஒன்றையும் வைத்துள்ளார். மேலும் அடிக்கடி லான்ச் செய்யப்படும் புதிய கார்களை வாங்கவும் அதிக ஆர்வம் காட்டும் இவர்,சுமார்  20க்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார். இதில் 2 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட கார்களும் 5-திற்கும் மேற்பட்ட கார்களும் அடங்கும்.

Tap to resize

Latest Videos

தேச பக்தியை மனதில் ஊற்றெடுக்க வைக்கும்... தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற தேச பற்று பாடல்கள்!

இந்நிலையில் நடிகர் விஜய் வாங்கிய கார்களில் ஒன்று தான் ரோல்ஸ் ராய்ஸ். 2012-ஆம் ஆண்டு விஜய் வாங்கிய இந்த கார் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், வரி ஏய்ப்பு சர்ச்சையில் சிக்கி அது சர்ச்சைக்கும் ஆளானது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து விஜய் கடந்த மாதம் இந்த காரை விற்பனை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டது. சுமார் 1கோடி ரூபாய்க்கு இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த காரை விற்பனை செய்த கையேடு, புதிய LEXUS LM கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷான தோற்றம் கொண்ட இந்த கார் தான், தற்போது பாலிவுட் பிரபலங்கள் முதல் தென்னிந்திய பிரபலங்கள் வரை பலரும் விரும்ப கூடிய காராக உள்ளது.

சந்திரபாபுவுக்கு கடைசி வரை சோறு போட்ட பிரபலம்! இறந்த பின்னரும் நன்றிக்கடன் செலுத்திய நெகிழ வைக்கும் சம்பவம்!

சென்னையில் இருக்கும் போது விஜய் இந்த காரை தான் பயன்படுத்தி வருகிறார், விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே செல்வது போல் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில்.வைரலாகி வருகிறது. 
2 கோடி முதல் 3.50 கோடி வரை விற்பனை செய்யப்படும் இந்த வகை கார்ககளில் 4பேர் அமர்ந்து செல்லும் விதத்தில் சிறியதாகவும்.. 7 பேர் அமர கூடிய விதத்தில் கொஞ்சம் பெரியதாக என இரண்டு விதத்தில் வடிவமைக்கப்பட்டது.

லெக்ஸஸ் எல்எம் கார், இந்தியாவை பொறுத்தவரை மிகவும் விலை உயர்ந்த கார் ராகங்களில் ஒன்றாகவே உள்ளது. எனவே இந்த காரை வாங்குவதற்கு 1 மாதத்திற்கு முன்பே முன்பணத்துடன் புக் பண்ண வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்டுகிறது. டொயோட்டா வெல்ஃபயரை அடிப்படையாகக் கொண்டே இந்த Lexus LM  கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போன்ற எஞ்சினையும் கொண்டுள்ளது.

பணத்துக்காக திருமணத்தையே நிறுத்திய அம்மா? நடிகருடன் Living Relation-ல் அசிங்கப்பட்ட த்ரிஷா! பிரபலம் ஷாக் தகவல்

GA-K மாடுலர் பிளாட்ஃபார்மில் கொண்ட இந்த காரில்,  4-சிலிண்டர் வலுவான ஹைப்ரிட் எஞ்சின் மூலம் 250hp மற்றும் 239Nm அமைந்துள்ளது. மின்சார மோட்டார் மற்றும் இன்றி, நிக்கல்-மெட்டல் ஹைட்ரைடு பேட்டரி உள்ளது. eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.  19 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது.  அகண்ட  LED டெயில் லைட்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. 360 டிகிரி கேமரா... போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த காரில் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Thalapathy vijay’s new Luxus LM 🙌👌

Good Afternoon X fam ! pic.twitter.com/dQRiikO7Tn

— Janhvi kapoor(Parody) (@JanhviKapoor33)

 

click me!