
'சர்க்கார்' பாடல் வெளியீட்டு விழாவின் போது... காமெடி நடிகர் கருணாகரன், விஜய் ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
கருணாகரன் விஜய்க்கு எதிரான பதிவை பதிவிட்டதால், கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் கருணாகரனுக்கு, விஜய் ரசிகர்களுக்கும் இடையே டுவிட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் கருணாகரனை கடுமையான சொற்களில் தாக்க, அதற்கு கருணாகரனும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கருணாகரன், தான் ஓட்டு போட்ட புகைப்படத்தை பதிவிட்டு, விஜய் குறித்து தான் பதிவு செய்த கருத்துக்கு வருந்துவதாகவும், தனது கருத்துக்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது, 'நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க ஒருசில வார்த்தையை நான் பயன்படுத்தியது தவறுதான். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் மிகவும் விரும்பும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்று கருணாகரன் கூறியுள்ளார்.
இத்தனை மாதம் கழித்து கருணாகரன் திடீரென மன்னிப்பு கேட்க, என்ன காரணம் என்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.