கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளது வருத்தமளிப்பதாகவும், இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது எனவும் நடிகர் விதார்த் கூறி இருக்கிறார்,
திரைப்பட நடிகர் விதார்த் நடிப்பில் லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனை முன்னிட்டு திருப்பூர் ஊத்துக்குளி ரோடு வாவிபாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் விதார்த் ரசிகர்களுடன் லாந்தர் படம் பார்த்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு விதார்த் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் திரில்லர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். முதற்கட்டமாக 100 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக திரையரங்குகளில் வெளியிடப்படும்.
இதையும் படியுங்கள்... 50 வயதில் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளாரா தளபதி? விஜய்யின் வியக்க வைக்கும் Net Worth விவரம் இதோ
தமிழகத்தில் நல்ல படங்களுக்கு இடையே எப்போதும் போட்டியிருக்கும். பொதுமக்கள் ஆதரவும் தெரிவிப்பார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது. இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் நம்மளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். லாந்தர் படத்திலும் முதல் சீன் கள்ளச்சாராயம் தொடர்பாக இடம்பெற்று இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அங்கு நடிகர் விதார்த் உடன் படம் பார்க்க வந்த ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் போது படத் தயாரிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... HBD Vijay : கமல் முதல் வெங்கட் பிரபு வரை... தளபதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்