
கொரோனா (corona) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, நடிகர் வடிவேலு (Vadivelu) நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில், தான் நலம் பெற பிராத்தனை செய்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், நடிகர் வடிவேலு 'மாநகரம்' படத்தின் இயக்குனர் சுராஜ் (Suraj) இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' (Naai Sekar Returns). இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம், பூஜையுடன் துவங்கியது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். மேலும் சமீபத்தில் சாங் கம்போசிங் பணிக்காக லண்டன் சென்ற படக்குழு, அந்த பணியை முடித்து கொண்டு சென்னை திரும்பிய இரு நாட்களில்... நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்: Kushboo Sundar:அந்த விஷயத்தில் நயன் - விக்கியை ஓரம் கட்டிய குஷ்பு - சுந்தர்.சி! வைரலாகும் வேற லெவல் புகைப்படம்
இதை தொடர்ந்து மூன்று பேரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவ்வப்போது வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு வந்தது. அந்த வகையில் நேற்றைய தினம் நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: Yashika Aannand Photos: டாப் அங்கிள் போஸில்.. ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து எக்கு தப்பா கவர்ச்சி காட்டும் யாஷிகா
இதை தொடர்ந்து நடிகர் வடிவேலு தற்போது நலமாக உள்ளதாக பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, இயக்குனர் சுராஜ், தமிழ் குமரன் ஆகியோர் டிசம்பர் 30 ஆம் தேதியே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினோம். மூன்று நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நான் மருத்துவமனையில் இருந்த போது என் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்து கொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் நலம் விசாரித்தனர் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
மேலும் செய்திகள்: அட கடவுளே இது என்ன உனக்கு வந்த சோதனை? அன்னபூரணியை தொடர்ந்து அம்மன் அவதாரம் எடுத்த டிக் டாக் பிரபலம்!
அதே போல் கொரோனா காலத்தில், அதில் இருந்து மீள மீம்ஸ் கிரியேட்டர்கள் கொடுத்த ஊக்கம் பெரிதும் உதவியதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுனடய நன்றிகளையும் மிகவும் உருக்கமாக வடிவேலு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்தக்கது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூவருமே அதில் இருந்து குணமடைந்து விட்டதால், விரைவில் சென்னையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.